தமிழ்த்துறை:

1986 - இல் கல்லூரி துவங்கிய போதே, அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும்,பாகம் -1 தமிழ் கற்பிக்கும்முகமாகத் தமிழ்த்துறையும் மலர்ந்தது. திருமதி. இரா. அங்கயற்கண்ணி,முனைவர்(திருமதி)கோ.விஜயா,முனைவர்(திருமதி)பி.பகவதி ஆகியோர் துறைத் தலைவர்களாகப் பணியாற்றிச் சிறப்பித்துள்ளனர்.

2006 ஆம்ஆண்டு முதல் முனைவர் (திருமதி)ச.பர்வதகிருஷ்ணம்மாள்அவர்கள் துறைத்தலைவராகச் செயலாற்றிவருகிறார்கள்.யுஜிசிதகுதித்தர்வில் தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்தஉதவிப்பேராசிரியர்களோடுதமிழ்த்துறைஇன்றுசிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள். வாய்மொழித் தேர்வை எதிர்நோக்கிய நிலையில் ஒருவரும், ஆய்வை முடிக்கும் தருவாயில் ஒருவரும் உள்ளனர்.
மாணவியர் பலர் பல்கலைக்கழகத் தேர்வு மதிப்பெண் தர வரிசைப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர்.

துறையின் சார்பில் நடத்தப்பெறும் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டங்களில் துறைசார்ந்த பல்வேறுஅறிஞர்பெருமக்கள் பேருரையாற்றிச் சிறப்பித்துள்ளனர்.பல்வேறு துறைகளில் பயிலும் மாணவியர்க்குத் துறையின் சார்பில் இலக்கியப் போட்டிகள், வினாடி – வினாப் போட்டிகள், நாடகம், பாரதி பாடல் ஒப்புவித்தல் போட்டி ஆகியன நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.ஆண்டுதோறும் திருக்குறள் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு, வாழ்வியல் நூலான திருக்குறளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்திவருகிறது. மதுரை வள்ளியம்மை நிறுவனத்தால் நடத்தப்படும் காந்தியச் சிந்தனைத் தேர்வில் மாணவியரைப் பங்கு கொள்ளச் செய்து நாட்டுப் பற்றை வளர்த்து வருகிறது.

2012 இல் விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 150 –ஆவது பக்தர்கள் மாநாட்டை ஒட்டி, கல்லூரி மாணவியர்க்குப் பல்கலைக்கழக அளவிலான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப்போட்டி ஆகியன நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. 2015 இல் மாணவியரின் கவித் திறமையை வெளிப்படுத்த புதுக்கவிதைப் பாணியில் கம்பன் கவியரங்கம் நடத்தப்பட்டது.

தமிழ்த்துறையின் சார்பில் பல்வேறு துறைகளில் பயிலும் மாணவியர்க்கு “சுற்றுலாவியல்” சான்றிதழ் வகுப்பு நடத்தப் பெறுகிறது.
துறைசாரா விருப்பப்பாடமாக, பாகம் 1-இல் சமஸ்கிருதம் பயிலும் தமிழ் அறியாத மாணவியர்க்கு அறிமுகத்தமிழ் வகுப்பும்,தமிழ்அறிந்த மாணவியர்க்கு சிறப்புத்தமிழ் வகுப்பும் தமிழ்த்துறையின் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது.

துறைப் பேராசிரியர்கள் விபரம் :

முனைவர் (திருமதி)ச.பர்வதகிருஷ்ணம்மாள்

பதவி : HOD

தகுதி : எம்.ஏ., எம்.ஃபில்., பிஹெச்.டி.,நெட்.

ஆராய்ச்சி பகுதி :

மின்னஞ்சல் :

View Profile :

திருமதிஆ.உஷா

பதவி : Assistant Professor

தகுதி : எம்.ஏ.,எம்.எட்.,எம்.ஃபில்.,நெட்

ஆராய்ச்சி பகுதி :

மின்னஞ்சல் :

View Profile :

திருமதி. த.தனலட்சுமி

பதவி : Assistant Professor

தகுதி : எம்.ஏ., எம்.ஃபில்.,நெட்.

ஆராய்ச்சி பகுதி :

மின்னஞ்சல் :

View Profile :

திருமதி.எம். கார்த்திகா,

பதவி : Assistant Professor

தகுதி : எம்.ஏ., எம்.ஃபில்., நெட்.

ஆராய்ச்சி பகுதி :

மின்னஞ்சல் :

View Profile :

Smt.M.BALA RANI

பதவி : Assistant Professor

தகுதி : M.A.,Ph.D.,SET

ஆராய்ச்சி பகுதி :

மின்னஞ்சல் :

View Profile :