DEPARTMENT OF TAMIL
தமிழ்த்துறை1986 -இல் கல்லூரி துவங்கியபோதே, அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும்,பகுதி -1 தமிழ் கற்பிக்கும்முகமாகத் தமிழ்த்துறையும் மலர்ந்தது.
பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நடத்திய தகுதித்தேர்வில் (NET) தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த இணைப்பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்களோடு தமிழ்த் துறை இன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மூவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள். திருமதி. ஆ. உஷா அவர்கள் முனைவர் பட்டத்திற்கான
வாய்மொழித் தேர்வை எதிர்நோக்கிய நிலையில் உள்ளார்கள். மாணவியர் பலர் பல்கலைக்கழகத் தேர்வு மதிப்பெண் தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
துறையின் சார்பில் நடத்தப்பெறும் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டங்களில் துறைசார்ந்த பல்வேறு அறிஞர் பெருமக்கள் பேருரையாற்றிச் சிறப்பித்துள்ளனர். வருடந்தோறும் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் வருகைப் பேராசிரியர்கள் வந்து உரையாற்றுகின்றனர். பல்வேறு துறைகளில் பயிலும் மாணவியர்க்குத் துறையின் சார்பில் இலக்கியப் போட்டிகள், வினாடி – வினாப் போட்டிகள், நாடகம், பாரதி பாடல் ஒப்புவித்தல் போட்டி ஆகியன நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் மாநில அளவிலான திருக்குறள் எழுத்துத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, வாழ்வியல் நூலான திருக்குறளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை நமது மாணவியர் பெற்று வருகின்றனர். மாநில அளவிலும், பல்கலைக்கழக அளவிலும் பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளில் மாணவியர் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று வருகின்றனர்.
2012 இல் விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற150-ஆவது பக்தர்கள் மாநாட்டை ஒட்டி, கல்லூரி மாணவியர்க்குப் பல்கலைக்கழக அளவிலான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப்போட்டி ஆகியன நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
2015 இல் மாணவியரின் கவித் திறமையை வெளிப்படுத்த புதுக்கவிதைப் பாணியில் கம்பன் கவியரங்கம் நடத்தப்பட்டது.
தமிழ்த்துறையின் சார்பில் பல்வேறு துறைகளில் பயிலும் மாணவியர்க்கு 2011 முதல் 2016 வரை “சுற்றுலாவியல்” சான்றிதழ் வகுப்பு நடத்தப் பெற்றது.
2017 முதல் “படைப்புக்கலை” மற்றும் “நாட்டுப்புறவியல்- ஓர் அறிமுகம்” சான்றிதழ் வகுப்பு நடத்தப்பெற்று வருகின்றது. பகுதி 1-இல் சமஸ்கிருதம் பயிலும் தமிழ் அறியாத மாணவியர்க்கு துறைசாரா விருப்பப்பாடமாக, அறிமுகத்தமிழ் வகுப்பும், தமிழ் அறிந்த மாணவியர்க்கு சிறப்புத்தமிழ்-வளர்தமிழ் வகுப்பும் தமிழ்த்துறையின் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. 2017-2018 ஆம் கல்வியாண்டில் கணிதவியல் மாணவி செல்வி. எஸ். சுந்தரி பல்கலைக்கழகத் தர மதிப்பீட்டில் 18 ஆவது இடம் பெற்றுள்ளார். 2019 மார்ச் 12 ஆம் நாள் கல்லூரியின் நிதி உதவியுடன் மாநில அளவிலான கவிதை – நாடகம் – சிறுகதை ஆக்கப் பயிலரங்கு நடத்தப்பட்டது. அதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 148 மாணவியரும், ஆசிரியர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
FACULTY MEMBERS :
Contact Us : saradatvl.tamizh@gmail.com